அன்புடையீர்

 

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)

 

அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும் நபிகள் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் நமதூரில் அல் ஜமா இஸ்லாமிய பைத்துல் மால் என்ற சிறப்பு நிதி அமைப்பு அமீரகத்தில் வாழும் நமதூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருணை உள்ளம் கொண்ட சகோதரர்களைக் கொண்டு அல்லாஹ்வின் பெருங்கருணையினால் 2002 ஆண்டு தொடங்கப்ப்ட்டு நமதூரில் உள்ள அனைத்து தரப்பு ம்க்க்ளும் வட்டியில்லா கடன் பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

 

இப்பணியினை வெற்றிகரமாக நடத்துவதற்காக நமதூரில் அனைத்து தரப்பிலுமுள்ள நம்பிக்கையுள்ள சகோதரர்களையும் உலாமாக்களையும் இணைத்து அதன் மூலம் செயல் திட்டங்களையும்  வரைமுறைகளையும் உருவாக்கி சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடந்து வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் அல் ஹம்துலில்லாஹ்.

 

இப்பனியின் சிறப்பை அறிந்த சில தணவந்தர்களும் சவூதி அரேபியாவில் உள்ள நம் சகோதரர்களும் பொறுளுதவியும்  நன்கொடையும் வழங்கியுள்ளனர். மேலும் சிலர் தங்களின் சேமிப்பில் வட்டியை தவிப்பதர்காக வைப்பு நிதியாகவும் இட்டு இதன் வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர்.

 

நமதூரின் ஏழை எளிய மக்களின் தேவைக்கு இச்சிறிய தொகை மிகவும் குறைவானது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் இவ்வமைப்பானது எந்த ஒரு லாப நோக்கையும் கருதி நடத்தப்படாததால் இதற்குண்டாகும் அன்றாட சிலவுகள். வாடகை. ஊழியர்கள் சம்பளம் மற்றும் காகிதப் பொருள்களின் தேவைகளை நன்கொடைகள் மூலமாகத்தான் செய்யவேண்டியுள்ளது. அதனால் தங்கள் பகுதியில் வழும் நமதூர் சகோதரர்களை நாடி இப்புனிதப் பணி தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

 

 நம் ஒருமித்த ஒத்துழைப்ப்க்கு வல்ல நாயன் நற்கூலி தந்தருள்வானாக ஆமீன்.

 

 

                                                        அல் ஜமா இஸ்லாமிக் பைத்துல் மால்

                                                                             அமைப்புக்குழு

                                                                     ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

 

                                                                        

                                                                                          HOME