மழைப் பெய்வதில் தாமதம் ஏன்?

 

ஜும்ஆ குத்பா பேருரை:மவ்லவி ஹாஃபிழ் அல்ஹாஜ் A. நூருல் அமீன் மன்பஈ

துணை முதல்வர். J.M.A. அரபுக் கல்லூரி லால்பேட்டை

 

 

மனிதர்களே நீங்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வின் உதவி தேவைப்பட்ட்வர்களாக இருக்கின்றீர்கள் அல்லாஹ்வோ உங்களிடம் தேவை அற்றாவனாகவும்,

 

புகழுக்குரியோனாகவும் இருக்கிறான் அவன் விரும்பினால் உங்களை அழித்து விட்டு வேறொறு புதிய படைப்பைக் கொண்டு வந்து விடுவான் இது அல்லாஹ்வுக்குச் சிரமமானது அல்ல

 

நாம் அல்லாஹ்விடம் தேவையுள்ளவர்கள் நம்முடையத் தேவைகளை அவனிடமே கேட்க வேண்டும் அல்லாஹ் நம்மை அவனிடமே கேட்கச் சொல்கிறான் நாம் கேட்டதைத் தகுந்தச் சந்தர்ப்பத்தில் நமக்கு கொடுப்பான்

 

நாமோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை நாம் ஒழுங்காக இல்லையென்றால் நம்மை அழித்து விட்டு வேறு புதிய படைப்பை படைத்து விடுவான் நம்முடைய ஒழுங்கின்மைக் காரணமாகவே காலாக் காலங்களிள் மழைப் பெய்வதில்லை மழையில்லததன் காரனமாக நாமும் வாடுகிறோம் பயிர் பச்சிலைகளும் வாடி வதங்கி கொண்டிருக்கின்றன.

 

நம்முடைய செயல்கள் நம்மைப் படைத்த அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டன. கொஞ்சம் கவனமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள நபி மொழியைப் படித்துப் பாருங்கள் நம்முடைய விபரீத விளைவுகள் தெளிவாகத் தெரியும்.

 

அப்துல்லாஹ் பின் உமர் என்ற பிரபலமான நபி தோழர் அறிவிக்கின்றார்கள்,

 

ஒரு நாளன்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது {ஸல்] அவர்கள் எங்களை நோக்கி பின் வருமாறு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். தங்களின் சொந்த நாட்டைத் துறந்து வந்திருக்கும் முஹாஜிரீன்களே ஐந்து தன்மைகள் உங்களிடம் வந்து விடக்கூடாது என அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

 

1-மக்கள் { விபச்சாரம் போன்ற } பாவங்களை பகிரங்கமாகச் செய்ய முற்பட்டு விடுவார்கள் அதன் காரனமாக அவர்கள் காலரா போன்ற கொள்ளை நோய்களாலும் முன்னோர்கள் கேள்வி பட்டிராத புதிய புதிய நோய்களாலும் சோதிக்கப்படுவார்கள்.

 

2- மக்கள் தங்களின் அளவுகளிலும் நிறுவைகளிலும் மோசடிச் செய்ய முற்பட்டு விடுவார்கள் அதன் காரனமாக பசி பட்டினி பஞ்சத்தாலும் அராஜக ஆச்சியாலும் சோதிக்கப் படுவார்கள்.

 

3– மக்கள் தங்கள் பொருட்களுக்குரிய ஜகாத்தை ஏழைகளுக்கு கொடுக்காமல் தங்களிடமே வைத்துக் கொள்வார்கள் இதனால் மழை பெய்யாமல் தடுக்கப் படுவார்கள் மற்ற உயிரினங்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அறவே அவர்களுக்கு மழை பெய்யாது.

 

4- உடன்படிக்கை ஒப்பந்தம் உறுதி மொழிகளை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள் அவர்கள் மீது அல்லாஹ் பகைவர்களை சாட்டி விடுவான் அவர்களின் பொருட்களை அவர்கள் அபகரித்து விடுவார்கள்.

 

5, ஆட்சி புரிவோர், அதிகாரத்திலிருப்போர் அல்லாஹ் இறக்கியச் சட்ட்ங்களுக்குப் புறம்பாக ஆட்சி புரிவார்கள், அவர்களுக்கு மத்தியில் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

 நூல், இப்னு மாஜா.